பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லாட்சிச் சிறப்பு & 267 கவலைப்பட்டன; கண்ணித் திவலை விட்டன! (1-பக். 178) வீமன் வந்து சேர்ந்த இயலைத் தொடங்கும் தொடக்கம் இது: உறக்க ஊசியின் ஒற்றைக் காதில் மயக்க நூலை மெல்லக் கோத்து நன்கு தைக்கப்பட்டிருந்த நான்கு இமைகளிலும். பையப் பையத் தையல் விட்டது; எட்டு நாள்களாய் இருட்டில் கிடந்த. வீமனின் விழிகளின் மேல் 'பளிச் சென-காலை வெளிச்சம் பட்டது! பிலம் போன்ற-தனது பேய் வாயைத் திறந்து... அதன் வழியே. கொட்டாவி ஒன்றைஅனுப்பினான் வெளியே! (1-பக். 184-185) வீமனைக் காணாத நிலையில் நால்வரும் கவலைப் பட்ட நிலையை கட்டைவிரலைக் காணாமல் கைவிரல் நான்கும் கவலைப்பட்டனவாகக் கூறினார். வீமன் விழித்த பின் வருவதை நான்கு இமைகளிலும் தையல் பையைப் பைய விட்டதாகக் கூறினார். இரண்டிலும் உருவகங்கள் உள்ளத்தைத் தொடுவனவாக அமைந்துள்ளன. ஈண்டும் கவிஞரின் கவிதைத் திறனை வியந்து போற்றுகின்றோம்.