பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 சொல்லாட்சிச் சிறப்பு & 269 ஒருமுகம் இல்லாது-எதிலும் இருமுகம் காட்டும்-உனது திருமுகம் என்பதால்தான்-அது செருமுகம் கண்டு விழுந்தது! (1-பக். 247) சுடுசொல் நிறைந்த இந்தப் பகுதியில் முகம் என்ற சொல்லின் ஆதிக்கம் சொல்லுந்தரமன்று. பல்வேறு விதமான முகபாவனைகளைத் துரோணன் ஒரு காலத்தில் பல்வேறு முகபாவனைகளைத் தனக்குக் காட்டிய துருபத னுக்குக் காட்டுகின்றான். இந்த இருவேறு முகபாவனை களைக் கவிதையில் காட்டுபவர் கவிஞர் வாலி என்பதைக் காண்பவர் நாம்; நம் மனத்திரையில் அனைத்து முக பாவனைகளும் விழுந்து நம்மை மகிழ்விக்கின்றன. சொல் வீச்சுகள் நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளுகின்றன. துருபதனிடம் அவமானம் அடைந்த துரோணர் அர்ச்சுனனைக் கொண்டு வென்று அவனை அடிமையாக்குவதைக் கவிஞர் வாலி கூறுவது பாஞ்சால தேசத்தின் பரம்பரைச் சொத்து-அதன் பாவலர் எழுதி வைத்த புகழ்நூல்! அதைப் புழுதியில் சாய்த்தது-ஒரு பூனூல்! முன்னோர் நட்டு வைத்த. வெற்றித் துவசம்உயரப் பறந்துவாணுத்து நீலத்தைவழித்தது! அத்தகுபதாகையை-அநதய பார்த்தன் கைக்கனை-ஒரு கெளபீனம் போல்-இன்று கிழித்தது! (1-பக். 251)