பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லாட்சிச் சிறப்பு : 271 ஒசையூட்டும் சொல்லிணைகளைப்பற்றி என் சொல்ல? சொல்லால் சொல்லமுடியாத சொல்லமுதம்! ஆழியின் அமுதம் போல் இனிப்பது! அரக்கு மாளிகையிலிருந்து தப்பிய பாண்டவர்களும் அவர்களைப் பெற்றெடுத்த குந்திதேவியும் பல காதம் நடந்து, கடந்து, மரக்கலம் ஏறி மந்தாகினியைக் கடந்து ஒர் ஆலமரத்தடியில் ஒய்வு கொண்டபோது அனைவரும் உறங்க, உறங்காத வீமனின் கருத்தோட்டத்தில் ஒரு பகுதி: வீமனின் உள்ளம் வாடியது. தாயும் தமையனும் தம்பியரும் தரையில் துயில்வது கண்டு. விழிகளில் வெள்ளம் ஒடியது! 'யாதவ குலம்யாத்த வெண்பா; குருகுலம் மருகியாய்கொஞ்சிய பெண்பா! எங்கள்தாயெனும் தெய்வதம்தரையே-பட்டுப் பாயெனப் படுப்பதா? அரைத்த சந்தனத்தை அமேத்தியம் அவமதிக்க விடுப்பதா? இதோ! இங்குத் துயில்கின்ற-எனது தமையன் தருமன்-எனக்குத் தாயைப் போன்றவன்; மகாதருமிஷ்டன்; தூசுதும்பற்றதீயைப் போன்றவன் !