பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 : பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு இந்த நெருப்புக்கு- - நெருப்பு வைக்க முயன்றானே&HSB செருப்புக்குசமமாகாத சுயோதனன்; தன் சுவாதீனம் அற்றுசனியின் காலடியில்-ஒரு சுவானம் போலிருக்கும் ஈனன்! என் தாய், தமையன்; தம்பியர் தவிக்க-அந்த நாய் தவிசு கொள்ளநான் விடுவதா? வெய்யிலைவெந்நீர் சுடுவதா? துரியோதனனே! துள்ளாதே! எங்களைஎரித்து விட்டதாய்எள்ளதே! தருக்கியே! நீ தாயின்... குடல்வழி வருகையில் ஜடம்; பின்பு- | குடம் வழி வருகையில் விடம் ! ( - பக். 288 -290) இவ்வாறு வீமன் மனத்திற்குள் புலம்புகின்றான். வெகுளியில் அவலம் வெளிப்படுகின்றது. வெண்பாபெண்பா என்ற இணை கொஞ்சுவதையும், நெருப்புக்குநெருப்பு வைக்க-செருப்புக்கு சமமாகாத தொடரில் வெகுளியும் அவலமும் சேர்ந்து வெளிப்படுவதையும் கண்டு மகிழலாம்.