பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274 : பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு பீடிகையாக வருவதில் உயர்த்திய கொடிகள் யாவும் கண்ணுக்குப் புலனாகுபவை. இழவுக் கொடியோ இதயத்தில் உயர்த்தப் பெற்றதால் கட்புலனுக்கு எட்டாதது! அழுக்காற்றில் அழுந்தியவனாதலால் அவன் உயர்த்திய கொடி இதயத்தில் அமைந்தது. நாகக் கொடியோன் ‘சுமப்பது சோகக் கொடி என்று கூறும் வாலியார் உயர்த்திய கொடி என்பதை நம் உள்ளம் காண்கின்றது! 'அழுக்காறு உடையார்க்கு அது சாலும் (குறள்-165) என்ற வாக்கால் அழுக்காறே பகையாக நின்று துரியனை அழிப்பதைக் காண்கின்றோம். இதனால் வள்ளுவரே அழுக்காற்றின்மீது வெகுளி கொண்டு அதைப் பாவி என்று ஏசுகின்றார் (குறள்-168) வனவாசத்தை அடியோடு வெறுத்த பாஞ்சாலி உதிஷ்ட்ரனைப் பேச்சால் சுடும்போது, அதனால் வீமனின் சினத்தி விசிறப்பட்டுச் சீறி எழுந்த அவனது பேச்சு: 'அன்பள்ள அண்ணனே! தாயொரு பக்கம்; நம் தாரமும் நாமும் ஒரு பக்கம்; வாய் கிழிய தருமம் பேசி வந்ததால் வந்தது துக்கம்! தடித்தடியாய்த் தம்பிகளை வைத்துக் கொண்டு தடியாலடிக்காமல்-நீ தருமத்தாலடித்தால். சொறிகள் மிகுந்த சுணங்கங்களிடம்-நல்ல நெறிகள் ஏற்படுமா? விழுந்து விழுந்து உபதேசித்தாலும்-அவற்றின் வெறிகள் விடுபடுமா?