பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/297

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லாட்சிச் சிறப்பு : 277 விழிப்புனலைத் துடைக்கின்றது. நம் கண்ணில் வழியும் நீரை நாமே துடைத்துக் கொள்ளுகின்றோம். முடியாமுடித்து' , 'கண்ணிர்-புண்ணிர், புணைகள்-கணைகள், அலை-வலை', 'மேருமலை-சேருமலை, நேமி-பூமி' என்ற சொல்லிணைகளில் பொருள் நயம் சொல்வீச்சின் ஆழத்தையும் அருமைப்பாட்டையும் உணரச் செய்கின்றது. அஞ்ஞாத வாசகாலத்தில் அர்ச்சுனன் தான் ஏற்கப் போகும் வேடத்தைப்பற்றி இயமன் புதல்வனுக்கு எடுத்துரைக்கும் பகுதி இது: பால் கணக்கு பார்க்கும் குடும்பத்தில் பெண்ணெடுத்தேன்; இப்போது பால் கணக்கு பார்க்க வொண்ணாத பிறப்பெடுப்பேன்! அப்ாலும் அல்லாது. இப்பாலும் இல்லாதுஎப்பாலும் தன்பாலாய் ஏற்பதற்கு ஏலாது. அப்பால் நின்றிருக்கும்அப்பால் நானாவேன்; ஒர்அலிப்பால் என்றாகி-விராடன் அந்தப்புரம் நான் போவேன் ! அரச குடும்பத்துஅரிவையர் தம்மைஆனந்த வாவியில் அமிழ்த்துவேன். பெயர் பூணுவேன்;