பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/298

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 : பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு நானலைவிட-அதிக நளினமாக நாணுவேன்! அருங்கலைகளால்-நான் அந்தப்புரத்தை ஆளுவேன்; ஆறிரண்டு திங்கள்-அன்பின் ஆண்மைக்கு மீளுவேன்! (I-247-49) இப்பகுதி பீடுநடைபோட்ட என் பின்னவன் ஒரு பேடு நடைபோடுவதா? என்று தருமனைத் துக்கிக்கச் செய் கின்றது. நாம் விதியை நொந்து கொள்ளுகின்றோம். 'அப்பால்-இப்பால்-எப்பால்-அலிப்பால்’ என்ற இணையின் சதுரங்க ஆட்டம் நம்மையும் ஆட்டம் போட வைக்கின்றது. பூணுவேன்-நாணுவேன்', 'ஆளுவேன்மீளுவேன்' என்ற இணைகளும் இணையற்றவை. விராடநகரில் போர் தொடங்கும்போது போர்க் களத்தில் அர்ச்சுனன் நிற்பதைச் சுட்டிக் காட்டித் துரோணர் அபாயத்தை அறிவுறுத்தியபோது அருக்கன் மகன் ஆணவத்தோடு பேசியதைக் கவிஞர் வாலி: 'தொடை நடுங்கும் துரோணர் பேச்சால்-நம் படைநடுங்கும்; நடுங்கட்டும்; ஒட்டுக்குள் கூர்மம் போல் ஒடுங்கட்டும்! தனியனாய் நின்று-நான் தனஞ்சயனை எதிர்ப்பேன்; தந்திருக்கிறேன் வாக்குட்என் தோழன் துரியனுக்கு; என் யாக்கை; உயிர்; வாழ்க்கை யாவும் உரியனுக்கு! அருமை நண்பனுக்கு-நான் அன்றுபட்ட கடனை