பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லாட்சிச் சிறப்பு * 281 யாதவவீரன் பேச்சில் கவிஞர் வாலி அமைத்த கவிதைப் பகுதியில் உள்ள வாதிப்பதாலும்-சாதிப்ப தாலும்', 'அறம்-மறம்-நிற 'கண்ணன்-அண்ணன்', வெறும் கிளை-பழம் தரும் கிளை, கலப்பை-கலப்பை, பழிக்கு-வழிக்கு', 'ஊழ்வினை-வாழ்வினை என்ற சொல்லிணைகள் சாதாரணமானவைதாம். ஆனால் அவை உணர்த்தும் பொருள் நளினங்கள் அற்புதமானவை. இவற்றுடன் சொல் வீச்சுகளை நிறுத்திக் கொள்வோம். 2. பழமொழிகள்: ஒரு நாட்டின் பண்பாட்டை உணர்வதற்கு அந்நாட்டு மொழியுள் வழங்கும்-பழமொழிகள் பெரிதும் பயன் படுவன. பழமொழிகளே அந்நாட்டு மக்கள்பால் அடிபட்டு வரும் மனஇயல்புகளை எடுத்துக் காட்டுவன வாகும். உலக வழக்காகிய இப்பழமொழிகளின் மேன்மையைக் கருதி இவற்றைக் கையாண்டு பொருள் சிறக்கச் செய்தல் நாவன்மையுடைய கற்றோர்க்கும் மற்றோர்க்கும் இயல்பாகின்றது. பழமொழிகளை சிறந்த உரைநடை ஆசிரியர் எவரும் கையாளுவர். பழமொழிகள் பயின்று வரச் செய்யுள் நூல் இயற்றும் தன்மை பேரறிஞர் நூல்களில் காணப்படும். சைவ சமயப் பெரியார்களும் ஆழ்வார் பெருமக்களும் பெருங்காப்பியப் புலவர்களும் பழமொழிகளைக் கையாண்டு தம் படைப்புகளைச் சிறப்படையச் செய்தனர். இம்மரபையொட்டி கவிஞர் வாலியும் தம் பாண்டவர் பூமியில் பழமொழிகளைக் கையாண்டிருப்பதால் அப்புதுக்கவிதைக் காவியம் புதுப் பொலிவினைப் பெற்றுப் புது மெருகுடன் திகழ்கின்றது. இனி, இப்பழமொழிகளின் ஆட்சியை இக்காவியத்தில் காண்போம்.தம்மை அவமானப்படுத்தி அனுப்பிய துருபதனைத் தன் அருமைச்சீடன் அர்ச்சுனனைக்