பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 & பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு பேசுகின்றான். அவன் பேச்சில் நாய்வாலை நிமிர்த்த முடியாது' என்ற பழமொழி அமைகின்றது. இனி எத்துணை முயன்றாலும். துரியோதனனை திருத்த முடியாது துரோணர் போன்ற தொல்லறிவாளர் புகட்டும் நல்லறிவால், அவன் நிமிர்த்த முடியாத நாய்வால்! (1-பக், 279) பழமொழி அமைந்த பகுதி பளிச்சென்று ஒளிவிட்டு பொருளைத் தெளிவாக விளக்குகின்றது. சஞ்சயன் தூது வந்த இடத்திலும் நாய்வால் துரியனைச் சுட்டுகின்றது. இங்கு கண்ணன் பேச்சில் இது வருகின்றது. 'என் தேசம் எனக்கு; உன் தேசம் உனக்கு! என இரு தரப்பார்க்கும்-ஒர் இணக்கம் வரச் செய்தால் சயமாகலாம்-நீ வந்த சந்தேசம் உனக்கு! அப்படியோர் அமைதி ஒப்பந்தம் உருவானால் சந்தோஷம்; ஆனால் உருவாகும் என்று சந்தேகம்! நாளிதுவரை-துரியன் பற்றி நான்செய்த ஆய்வால் அறிந்த உண்மை யாதெனில் அவனொரு நாய்வால்! (11-பக். 328)