பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/312

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணைத் திறந்துகொண்டுகிணற்றில் விழுந்த கதையாய்... தவறு என்று-தருமன் தெரிந்தே ஆடினான் கவறு; கவறில் விட்டதைக் கேட்பதுகவறைக் காட்டிலும் தவறு! இழந்தது- -« به نامهای இழந்ததுதான் கிணற்றில்விழுந்தது விழுந்ததுதான்! (II — Lé. 294) இதில் பழமொழி அமைந்திருப்பதைக் காணலாம். பன்னிரண்டு ஆண்டு அடவி வாசம், அதற்குப் பிறகு ஓராண்டு ஆரும் அறியாவ்ாசம். இவை முடிந்தபின் வந்தால் பாதி தேசம் தருவது என்பது ஒப்பந்தப் பேச்சு. அதைக் கேட்பதற்கு முறை ஏற்படுத்துகின்றான் ஆழியான். இராமாவதாரத்தில் இலக்குவன் தம்பியாக இருந்து கூர்மையாகவும் நியாயமாகவும் பேசுவதையும் கிருஷ்ணாவதாரத்தில் பலராமன் அண்ணனாக அமைந்து சற்று மழுங்கலாகவும் அநியாயமாகவும் பேசுவதையும் காண்கின்றோம். விசுவரூபன் வரலாறு கூறுமிடத்தில் இரண்டு பழமொழிகள் வருகின்றன. சல்லியன் கூற்றாக இஃது அமைகின்றது. தேவராஜன்திரிலோகாதிபதி, 'எவர் வரினும்-அவன் எழுந்திருக்கத் தேவையில்லை! என்பது எழுதப்படாத விதி!