பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/321

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 சொல்லாட்சிச் சிறப்பு : 301 (3) நாகலோகத்தில் வீமன் அதிதியாகக் கொள்ளப் பெறுகின்றான். அவனைக் கண்டதும் அரவுகளில் ஒரு வனான ஆர்யகன் ஆனந்தக் கண்ணிர் வடிக்கின்றான். இரத்தபாசம் துடிக்கின்றது. இவன் ஆயர்குலத்து ஒருவனாக விளங்கியவன்.பீமன் இவனது பெளத்திரனுக்குப்பெளத்திரனாக அமைகின்றான். இந்நிலையில் வாலியார் வாக்கு: பெயரனுக்குப் பெயரானை; பல பெயர் பெயர்த்தாலும்-தனது பெயர் எஞ்ஞான்றும் பெயரானை; ஆண்யானை அணையானை; இனிய தருமனின் இளையானை, வன்கணாளர் எவர்க்கும் ഖങ്ങണurഞങ്ങ; கதையேந்தும் கரத்தானை; நெஞ்சு உரத்தானை; அத்தின புரத்தானை; (്ഥങ്ങങ്ങ குலமுதலாய்க் கொண்ட பீமனை... ஆர்யகன் அடையாளங்கண்டு ஆரத்தழுவின்ான்; (1-பக். 175) வாலியார் தமக்குப் பிடித்த கதைமாந்தனாக அமைந்து விட்டால் தம்மை மறந்து அவனிடம் ஆழங்கால்பட்டு விடுகின்றார். சொற்கள் பொறிமத்தாப்புப் போல் உதிரத் தொடங்குகின்றன. நாமும் அவற்றின் ஒளியில் ஈடுபட்டுத் திளைக்கின்றோம்.