பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/323

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சொல்லாட்சிச் சிறப்பு : 303 அவன் கொம்பில்லாததந்தி! தும்பிக் கையில்லாததந்தி! ஆண்தகைஆருமே அவனுக்குப் பிந்தி! அவனைப் பெறஆற்றியிருக்க வேண்டும் தவம்... குந்தி-மணி உந்தி-நெடுநாள் முந்தி! (1-பக். 251) இரண்டு உருவகங்கள் (நந்தி, தந்தி) வேறு பல ஒத்த ஒசைகளையுடைய சொல்லடுக்குகளால் பெருமை பெறுகின்றன. (6) அரக்கு மாளிகைக்குப் பாண்டவர்கள் வந்த நாளன்று ஆண்டுதோறும் நடைபெறும் பெருவிழா (பிரம் மோத்சவம்) கொடியேற்றும் நாள்; உருத்திரனுக்கு காளை வாகனம். இந்தச் சிவபிரானைப் பற்றிய வாலியின் வாக்கு. கலை நிலவில் கால் வாசியை குடுமியில் குடிவைத்த காசி வாசியை, எலியூரும் ஏரம்பன் ஏத்துகின்ற புலியூரின் பெரு வாழ்வை; அவத்தைப் புரிந்து அவத்தைப்படுவார் 5 கட்டப்பெற்ற ஊர்-வாரணாசி, வடகாசி. வில்லிபாரதத்தில் 'வாரனாவதம்’ என்றே வழங்குகின்றது.