பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/328

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லாட்சிச் சிறப்பு * 309 இவ்விருவருடைய கவிதைப் பகுதிகளை ஒப்பிட்டு நோக்கினால் இரண்டின் சொல்வளமும் சொல்லழகும் போட்டி போட்டுக் கொண்டு நிற்பதைக் கண்டு மகிழலாம். (10) கண்ணன்-காயாபூ வண்ணன்-துது போனபோது அவன் யோசனைப்படி குந்தி கன்னன் இல்லத்திற்கு ஏகித் தன்னை உண்மையான தாய் என விளக்கி, புத்திரன் வைத்த தேர்விலும் வென்று அவனைத் தன் பக்கம் வருமாறு பணிக்கின்றாள்: ‘நன்மகனே! உனை நானாவிட்டேன் நதிவழி! எவர் வாழ்க்கையும் நடப்பது வல்லான் வகுத்த விதி வழி! ஆனது ஆயிற்று; இனி இவ் அன்னையோடு வருக; அஞ்சோடு ஆறு ஆகி-எனக்கு ஆனந்தம் தருக! துரியன் உறவைத் துண்டி, தாய் சொல் தவறா? சரியா? நீயே தேறு, ஆத்திரம் வரலாம்; வந்தால் ஆறு! (I-பக். 352-53) இங்ங்னம் குந்தி வேண்ட அதற்கு ஒப்பவில்லை தலைச்சனின் மனம், வள்ளலின் புத்தி. இப்போது கன்னன் பேச்சாக அமைந்த பகுதியில் வாலியாரின் சொற்பொருள் நயத்தைக் கண்டு மகிழலாம்.