பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/331

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312 & பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு (அ) முருகப் பெருமான் அருளிய மாலையைப் பெற்ற அம்பை பேசியது ‘இனி, இந்த மாலையைஎந்தக் காளைக்குப் போட்டுகொட்டு முழக்கோடு கொம்பு சீவிவிட்டால்... அது பீஷ்மன் பெருங்குடலைஒரே குத்தாகக் குத்திஉருவி வெளியே போடும்?’ (1-பக். 53) பாடற்பகுதியை ஊன்றிப் படித்து பொருளை உணரலாம். (ஆ) தந்தையை எதிர்த்துப் பேசப் பிள்ளையை துரியோதனனை)த் தயாராக்குகின்றான் சகுனி. சகுனி-கொம்பை சீவிவிட்டான்; பெற்றவனை எதிர்த்துப் பேச-பிள்ளையை ஏவிவிட்டான்! (1-பக். 255) பாடல் பகுதியைப் படித்துப் பொருளை உணர்ந்து கொள்ளலாம். (2) கை கழுவினான்: காதலன் சால்வன் தன்னைத் துறந்ததை அம்பை கூறுவது மெய்தழுவிய காதலன்-எனைக் கை கழுவினான். (1-பக். 54) இங்கு கை கழுவினான்’ என்ற மரபுத் தொடர் 'புறக்கணித்தான்-கைவிட்டான்' என்ற பொருளில் வருவதைக் காணலாம்.