பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/333

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

314 & பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு (6) வெற்றியை பாக்கு வைத்து அழைத்தல்: மரியாதையாக வருமாறு அழைத்தல் என்ற பொருளில் வரும் மரபுத் தொடர். கவிஞரின் கூற்றாக ஒரு பூங்காவைப் பற்றி வருவது - ஆரும்அதற்குவேலிகள் வேய்ந்ததில்லை; ஆயினும்வெற்றிலை பாக்குவைத்து வருந்தியழைத்தாலும்-வந்து காலிகள் மேய்ந்ததில்லை! (1-பக். 207) ஊன்றிப் படித்தால் மரபுத் தொட்ரின் பொருள் மயக்கமின்றித் தெளிவாகும் (7) காறித்துப்புதல்- மிகவும் இகழ்தல் என்ற பொருளில் வருவது. கன்னியாயிருக்கையில் குழந்தையின்ற குந்தியைப் பற்றிய பாடற்பகுதி: 'குந்திபோஜன் மகள்குமரியாயிருக் கையிலேயே ஒரு - io - - குழந்தைக்குத் தாய்! என்றுகேள்விப்பட்டால்காறித்துப்பியே கொன்று விடும் கோபாலர் வாய்! (1-பக். 215) பாடலை இடம் நோக்கிப் படித்தால் மரபுத் தொடரின் பொருள் தெளிவாகும். (8) கண்ணெச்சில்- திருஷ்டி, கண்ணேறு என்ற பொருளில் வருவது. கன்னனின் வளர்ப்புத் தாய் (ராதை) திருஷ்டி கழித்ததைக் கூறுவது