பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/338

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லாட்சிச் சிறப்பு & 319 துடைதட்டியவன்; துடைதட்டிய வேகத்திலேயேதுருபதனிடம் தோற்றுகடைகட்டியவன்! (1-பக். 253) பாட்டுப் பகுதியை மேலோட்டமாகப் படிப்பதிலேயே மரபுத்தொடர்களின் பொருள் ஒளி வீசுவதைக் கண்டு மகிழலாம். (17) கால்மாடு தலைமாடு தெரியாமல் குதித்தல்: மகிழ்ச்சிப் பெருக்கால் ஆனந்தப்படுதல். குந்தியின் மகன் உதிட்டிரன் இளவரசுப் பட்டம் ஏற்க இருக்கிறான் என்பதை அறிந்து ஊரார் மகிழ்ந்தனர், ഉണ്ണi ஊர்ப்பட்ட சந்தோஷத்தில் கால்மாடு தலைமாடு தெரியாமல் குதித்தது; (1-பக். 254) என்ற பகுதி தெரிவிக்கிறது. இதில் மரபுத் தொடர் மகிழ்ச்சிப் பெருக்கை அற்புதமாகப் புலப்படுத்துவதை அறிந்து மகிழலாம் (8) தலையில் அடித்துக் கொள்ளுதல்-துக்கப்படுதல்; தூபம் போடுதல்-தூண்டிவிடுதல். தருமபுத்திரனுக்குத் தன் தகப்பனே இளவரசுப் பட்டம் கட்ட ஏற்பாடு செய்து விட்டானே என்று அறிந்த துரியன் நிலை: - என்று தலையில் அடித்துக் கொண்டான் துரியோதனன்; அவனுக்கு