பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/340

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லாட்சிச் சிறப்பு * 321 திரெளபதியை-ஐவர் திருமணம் செய்துகொள்ளதலையாட்டாது என் மனம்; நான்தரவொண்ணாது சம்மதம்! (I-பக். 361) என்ற பாடற்பகுதியில் இந்த மரபுத்தொடர் அமைந் திருப்பதைக் கண்டு மகிழலாம். இறுதியாக ஒரே ஒரு சிறப்பான நயத்தொடரைக் காட்டுவேன். இராசசூய யாகம் நடைபெற்ற பொழுது முதல் மரியாதை கண்ணனுக்குக்-காயம்பூ வண்ணனுக்குத் -தரப் பெற்றது. இதைப் பொறுக்காத சிசுபாலன் கண்ணன் மீது வசைமாறி பொழியத் தொடங்கினான். ‘துவாரகை-சின்னஞ்சிறு தீவு; அதுவா தேசம்? தேசம் என்று சொல்லிதப்பிலித்தனமாகஅளக்கிறானே கதை, அட! அதுதான் மோசம்! சிசுபாலன் இப்படிச் சொல்லிவிட்டு நக்கலாய்ச் சிரிக்க சபையிலும் சிலர் அதேபோல் சிரித்து இவனுக்கு ஒத்து ஊதினர். அது அவனைச் சிண்டிவிட்டது இன்னும் பேசு!" என்று இதனைக் குறிப்பிடும் வாலியார், சிசுவாகி பாலனாகிசீரிளமைத் தாண்டிய பின்னும்சிசு, பாலன் மாதிரியேவிளைவை சிறிதும் சிந்தியாமல்சிசுபாலன் பேசினான்; தருமனைசின்னத்தனமாய் ஏசினான்! (I-பக. 98) என்று கூறுவார். இதில் வரும் சிசு பாலன் என்ற