பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/342

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் - 6 (கிளைக்கதைகள்) காவியத்தில் கிளைக் கதைகளின் (Episodes) பங்கு மிகப்பெரிது; மிகவும் இன்றியமையாதது. கிளைக் கதைகள் மூலக்கதை உணர்த்தும் உண்மைக்கும் பிறவற்றிற்கும் துணைபுரிந்து மூலக்கதையின் பெருமையைப் பன்மடங்கு உணர்த்துகின்றன. கம்பனிலும் வில்லியிலும் இவற்றைக் காண்பதைப் போலவே வாலியாரின் பாண்டவ பூமியிலும் காண்கின்றோம். முக்கியமான சிலவற்றை ஈண்டுக் காட்டுவோம். இவற்றை வாலியாரின் புதுக்கவிதை யிலேயே தெரிவிப்பேன். கதைகள் இன்றியமையாத வையாக இருப்பினும் அதைவிட புதுக்கவிதையிலேயே தெரிந்து கொள்வது மிகவும் இன்றியமையாதது. 1. நரிக்கதை பிள்ளைப் பாசத்தால் பீடிக்கப்பெற்ற கண்ணிலான் 'கணிகன் ஒருவனைக் கூட்டி வருமாறு பணிக்க, அவன் வருகை புரிகின்றான். இவன் ஒரு கணக்குப் புலி; மன நோய்க்கு மருத்துவன்; இவன் ஒரு இராஜ தந்திரி, சகுனி யின் அரசாங்க அமைச்சன். காட்சியிலான் தன் நிலையைக் கூற, கணிகன் அரசியல் தத்துவத்தை விளக்கி விட்டு ஒரு நரிக்கதையைக் கூறுகின்றான். வெற்றி விருட் சத்தின் விதையாகப் பாவித்து அதன்படி ஒழுகுமாறு பணிக்கின்றான். ஒரு காலத்தில் ஒரு காட்டில்

  • பா. பூ, பாகம்-1 பக். 262