பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/359

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

340 & பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு “ஒவ்வொருவர் மனையிலும் ஒண்டொடி பாஞ்சாலி ஓராண்டு பரியந்தம் ஒழுகுவாள் இல்லறம், ஒருவரோடு-அங்ங்னம் ஒழுகும் இல்லற இன்பத்தை பிறிதொரு பாண்டவர் பார்க்க நேர்ந்தால்... அவர் ஆரண்யம் சென்று ஆறிரு திங்கள் அநுட்டிப்பர் துறவறம்! இவ்வாறு-தனது இளவல்களின் ஒப்புதலோடு. உதிட்டிரன்-ஒரு விதியை வரைந்தான்; அது பற்றி பிரம தேவனின் புத்திரனிடமும் பறைந்தான்! வீணை நாரதன்-அதனை வழிமொழிந்து-அவர்களுக்கு வாழ்த்துகள் கூறினான்; பின் விசும்பில் ஏறினான்! (I-பக். 18-19) " இக்கிளைக் கதை முதற்கதை வளரத் துணைபுரிகிறது. விஜயனின் ஆறு திங்கள் வனவாசத்திற்கும் அதில் நடை பெற்ற பல்வேறு நிகழ்ச்சிகட்கும் இக்கதை ஒரு விதை! 3. அந்தணன் கதை தருமன் அறந் தவறாது நல்லாட்சி புரிந்து வருகையில் ஒருநாள் ஒர் அந்தணன் வருகின்றான். அரண்மனை வாயிலில் ஆத்திரமும் அழுகையுமாய் குய்யோ முறையோ என்று கூச்சல் போடுகின்றான். விஜயன் வெளியே வந்து 4 பறைந்தான்.இது மலையாள மொழி. தமிழில் வந்தேறியது.