பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/362

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

so கிளைக் கதைகள் & 343 பார்த்தன். அந்தணன் கதை அர்ச்சுனனுக்கு ஆறிரு திங்கள் அடவி வாசத்தை அருளியது! மூலக்கிதையின் ஒட்டத்தை ஒரு திசையில் முடுக்கியது. 4. முதலைகள் கதை பாண்டி நாட்டில் சித்திராங்கையிடம் விடைபெற்ற பார்த்தன் தன் தீர்த்த யாத்திரையைத் தொடருகின்றான். தென்கடல் ஒரத்திற்கு வந்தான்; அங்கு- - ஆசிரமங்கள் அமைத்து வதியும் யதிகளுக்கு-தனது வணக்கங்களைத் தந்தான்! தவசிகளின் தபோவனத்தைச் சுற்றி. 'அகஸ்திய தீர்த்தம்; செளபத்ர தீர்த்தம்; பெளலோம தீர்த்தம்; காரந்தம தீர்த்தம், பரதவாஜ தீர்த்தம்! எனும் திருநாமங்களோடு-ஐந்து தீர்த்தங்களைக் கண்டான்; ஆனால் அதில் ஆரும்-நீர் ஆடாதது ஏனென்று அறியாமல் நின்றான்! " 5 அர்ச்சுனன் வந்த இடம் 'இராமேசுவரம் எனக் கருத இடம் உண்( அங்கு கந்தமாதனபருவதம் போகும் வழியில் சில தீர்த்தங்கள் உள்ளன சிலவற்றில் நீர் உண்டு; சிலவற்றில் நீர் இல்லை. இவைதான் அவையோ எனக் கருத இடந்தருகின்றது, வாலியார் என்ன கருதுகிறாரோ?