பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 & பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு அருவிமகள்அடவு பிடிக்கும்- - - ஓசையும் ஒயிலும்-ஊரார்க்கு உணர்த்துமந்த சயிலம்! ஒர்அந்தம் அற்றஅந்தம் பெற்றஅந்தப் பர்வதம்ஆயர் குலத்தவர்அனைவர்க்கும்ஆராதனைக் குரிய தெய்வதம்! ( பக்-42-43) வளமான வருணனை படிப்போரை 'வாருங்கள் ! வாருங்கள்! என்று வரவழைக்கும் வண்ணம் மிக்க தெய்வப் பருவதம்! - ஆழ்வார் பாசுரங்களில் இம்மலை கோவர்த்தனம் என்ற பெயரால் சுட்டப்பெறுகின்றது. வடமதுரையிலிருந்து சுமார் 20 கி. மீ. தொலைவிலுள்ளது. மரங்கள் நிறைந்து அழகான காட்சி தருகின்றது. - குரவிற் கொடிமுல்லைகள் நின்று உறங்கும் கோவர்த்தனம் என்று வருணிப்பர். கோவர்த்தனத்தைப் பெரியாழ்வார், ஆண்டாள், நம்மாழ்வார் ஆகிய மூவரும் மங்களாசாசனம் செய்துள்ளனர். கண்ணன்மீது காதல் உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாத நிலையிலுள்ள ஆண்டாள், கற்றன பேசி வசவு உணராதே காலிகள் உய்ய மழைதடுத்துக் கொள்ளக் குடையாக எய்தி நின்ற கோவர்த்தனத்து என்னை உய்த்திடுமின். ' 3 பெரியாழ். திரு. 35; 11 - . 4 நாச். திரு. 12: 8