பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/383

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(சுவைகளின் திறம்) கவிதையைக் கனிவித்துப் படிப்போருக்கு இன்பத்தை நல்குவது அதில் பொதிந்துள்ள உணர்ச்சி. அந்த உணர்ச்சியால் உள்ளம் பூரிக்கும் பொழுது பொங்கி வரும் இன்பத்தைத் தான் தமிழ் இலக்கண நூலார் மெய்ப்பாடு என்ற சொல்லால் குறித்தனர். இந்த இன்பப் பெருக்கு மெய்யின் கண் புலப்படுவதர்ல் மெய்ப்பாடு' என்று திருநாமம் இட்டதாகக் கருதலாம். உலகப் பெருள்களைக் காண்பது ஒருநிலை; அவற்றைக் கண்டு இன்புறுவது மற்றொரு நிலை. ஒவ்வொருவரும் பொருள்களைக் கண்டு மகிழ்வதற்கும் மகிழாது இருப்பதற்கும் அவரவர் மனநிலையே காரணமாகும். மனத்தின் போக்கும் ஒரு நிலையில் இருப்பதில்லை. அஃது இன்பமுற்றிருக்கும் பொழுது உலகமே இன்பமயமாகத் தோன்றும்; துன்பமுற்றிருக்கும் பொழுது உலகம் துன்ப மயமாகக் காட்சியளிக்கும். ஆனால் மனம் இன்பத்திலும் துன்பத்திலும் நிலைத்திருப்பதில்லை. அது பொருள்களின் நிலையைப் புறக்கணித்து இன்பதுன்பங்களை அநுபவிக் கின்றது. இவ்வாறு மனம் தொன்றுதொட்டு எத்தனையோ பொருள்களை அநுபவித்துள்ளது; மனம் அப்பொருள் களை அநுபவிக்கும்பொழுது அஃது அநுபவித்தவாறு அப்பொருள்கள் தமது உருவத்தை மனத்தில் செதுக்கி விட்டுப் போகின்றன. பிறகு மனம் மீண்டும் அப்பொருள் களைக் காண நேரிடுங்கால் அவை முன் அநுபவித்த சுகம் அல்லது துக்கம்-உணர்ச்சியைத் தட்டி எழுப்புகின்றன. இவ்வாறு மனத்தில் செதுக்குண்டிருக்கும் உணர்ச்சியைத்