பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/386

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுவைகளின் நிறம் * 367 ஒற்றுமையில் வேற்றுமை : ஒன்பதாக வகுக்கப் பெற்றுள்ள ஒர் உணர்ச்சிகளுள் ஏதாவது ஒர் உணர்ச்சியுள் பிற உணர்ச்சிகள் கலக்காமல் இருப்பது அரிது; பிற உணர்ச்சிகளின் கூறுகள் அதில் இருக்கத்தான் செய்கின்றன. பூமியை எடுத்துக்கொண்டால் அதில் நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்னும் நான்கும் கலந்துதான் இருக்கும். மற்றவை இருந்த போதிலும், பூமியின் கூறு அதில் அதிகமாயிருப்பதால், அதைப் பூமி என வழங்குகின்றோம். அவ்விதமே நாம் சுவைகளின் வேறுபாட்டையும் உணர்தல் வேண்டும். பல இடையூறுகள் இருந்த போதிலும் அவற்றைப் பொருட்படுத்தாமல் ஒரே நோக்கமாகத் துஷ்யந்தனையே நாடிய சகுந்தலையின் மனவுறுதியை வீரத்தின் கூறாகக் கொள்ளலாம். ஆனால் கவிஞன் அதைக் காதலின் கூறாகக் கொண்டுள்ளான். அங்னமே சிறை யிருந்த பிராட்டியின் மன உறுதியை வீரமாகக் கொள்ளலாமேனும், காதலாகக் கொள்வதே மரபு. இவ்வாறே, இசைக் கலையிலுள்ள ஏழு ஸ்வரங்கள் ஒவ்வொன்றிலும் பிற ஆறு ஸ்வரங்கள் கலந்திருப்பதையும், கதிரவன் ஒளியிலுள்ள வெண்மை நிறத்தில் எழு நிறங்கள் கலந்திருப்பதையும் அறிஞர்கள் குறித்துள்ளனர். ஆராய்ந்து பார்ப்பவர்களுக்கு ஒற்றுமையும் தோன்றும்; வேற்றுமையும் புலனாகும். சுவைகளின் அடிப்படையாகவுள்ள உணர்ச்சிகளை ஆராயும்போதும் ஒற்றுமையும் காணப் பெறும்; வேற்றுமையும் காட்சியளிக்கும். வேற்றுமையைக் கொண்டுதான் உணர்ச்சிகள் ஒன்பதாகப் பிரிக்கப் பெற்றன. உலகியல் நிகழ்ச்சிகள்: உலகியல் நிகழ்ச்சிகள் சுவையன்று. உலகியலில் நிகழும் செயல்களால் உண்டாகும் இன்பத்தை இரசம் என்று கொள்ளுதல் பொருந்தாது. காரணம், ஒரு சுவைக் குக் கூறும் இலக்கணம் எல்லாவற்றிற்கும் பொருந்துவதில்லை.