பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/391

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

372 : பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு நாகங்கள் அவனைக் கடித்தன. அவன் உட்செவிக்குள் ஒரு கட்செவி நஞ்சை உமிழ்ந்தது. இந்த நஞ்சு பீமனின் மூளையில் தாக்கியிருந்த துரியன் வைத்த நஞ்சுக்கு முறி வாயிற்று. பீமன் பிழைத்துக் கொண்டான். தன்னைக் கட்ட விழ்த்துக் கொண்டு தன்னைக் கொத்திய பாம்புகளனைத் தையும் தன் நகக்கூர் கொண்டு கிழித்து நாசப்படுத்தினான். இந்நிலையில் நல்ல பாம்பொன்று நாகராஜனிடம் பீமனைப்பற்றிப் பரிசீலிக்கப் பிராது கொடுத்தது; வெகுளியில் படமெடுத்து தம்முடைய பெருமையையும் மனிதனுடைய சிறுமையையும் பேசித் தீர்த்தது. நமக்கு நாக்கு இரண்டு; வாக்கு ஒன்று! மனிதனுக்கு நாக்கு ஒன்று; வாக்கு இரண்டு! ஆகவே, அவனை நாம் விடக்கூடாது; (1-பக். 174) என்று கூறியது; ரெளத்திரத்தோடுராஜநாகம் ஒன்று கூறியது; கூடவேசீறியது! சீறியது என்றாலும்-அது சொன்ன சொல்சீரியது என்பதனால்... இதர நாகங்களும்-அதை ஏற்றன; பீமனைஅழிப்பதற்கு-ஆண்டையிடம் அனுமதி கேட்டன! (1-பக். 174)