பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/397

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

378 & பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு கொப்பூழ்-அந்தக் காங்கையில் கரிந்தது (1-பக். 106) இந்நிலையில் நகர் திரும்பிய துரியனுக்கு உறக்கம் வரவில்லை. அழுக்காறு அவனை அசத்தியது. இந்நிலையில் இவனுக்கு வந்த கோபத்தை விநோதமாகச் சித்திரிக்கின்றார் கவிஞர் வாலி. நாகக் கொடியை நிமிர்த்திப் பிடிப்போன்-நிதம் சோகக் கொடியை சுமந்து நின்றான்; "சமத்காரம் இல்லாத சாதாரண தருமனுக்கு சார்வ பெளமன் என்று Gam_{មបណោ្ត ! தவளையைத் தின்னும் தண்ணிப் பாம்பிற்கு ஆதிசேஷன் என்னும் அங்கீகாரம்? 6T6 is எரிச்சல் கொண்டான்! எண்ணற்ற பரிசில்களைஎண்ணிப் பார்த்தான்; நெஞ்சில்எண்ணியதன்றி-விரல் விட்டும் எண்ணிப் பார்த்தான்! விரல்களில் அடங்குமா? விண்மீன்களின் கணக்கு? வந்தது அவனுக்கும்-அவன் விரல்களுக்கும் பிணக்கு! பத்து விரல்களையும் பளாரென்று