பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/399

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

380 & பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு கண்ணிலான் தவிசிலிருந்து எழுந்து சகுனிமேல் எரிந்து விழுந்து பேசுவதை வாலியார் விரித்தோதுகின்றார். 'ஆலம்போல் வளர்ந்துவிட்ட ஆலமே! காந்தாரியின்கூப்பிறந்துவிட்ட-கஷ்ட காலமே! என்இஷ்டமகனைப் பிடித்து-தன் இஷ்டம்போல் ஆட்டுவிக்கும் அஷ்டமத்துச் சனியே! அறிவில் அஷ்டகோணல் கொண்ட சகுனியே! மூக்கு முழியோடு உலவும்தீக்குறியே! மும்மலங்களின்மொத்தக் கலவையே! செய்துமுடித்தனையே பாவி!-என் முத்தனைய மூத்த மகனுக்கு மூளைச் சலவையே! மகனுக்கு-நீ மாமனா; உயிரைஎடுக்கப் பிறந்த ஏமனா? - ஒன்றுவிட்ட சோதரர்க்கிடைநின்றுவிட்ட நெடுஞ்சுவரே!. மஞ்சனாய் வந்து-எனது மனைபுகுந்த மாபெரும் தவறே!

  1. îî-***பொருளை போகத்தைதிருடித் தின்றார்? எந்ததருமத்தைக் கொன்றார்?