பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/403

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

384 : பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு தந்தையும்-என்தனயரும்அபிமன்யு தலைமையில்ஆற்றுவர் யுத்தம்; அவர்அள்ளித் தருவர்-நான் அளகபாரம் முடிக்க-அந்த அரவக் கொடியோன்ஆக்கையின் ரத்தம்! விழிகளில் வைகாசி வெய்யில் அடிக்க; வெப்பில் வனமேனிவெந்நீர் வடிக்க; கத்திரித்த கவுளிவாலாய்கனியதரம் துடிக்க; கண்ணில் கிடந்து கிடந்து கதுப்புகள் துடிக்க; தீரஉரை நிகழ்த்தி நின்றாள்திரெளபதி ! (II — uö. 335-36) பாஞ்சாலியின் கோபத்தில் மெய்ப்பாடுகளும் தோன்றி யிருப்பதை நோக்கி மகிழலாம். 3. காதல் சுவை: வடமொழியில் இதனைச் 'சிருங்காரம் என்பர். தொல்காப்பியர் இதனை உவகைச் சுவை என்று குறிப்பிடுவர். சுவைநூலார் சிருங்காரத்தை முதல் சுவையாகக் குறிப்பிட்டுள்ளனர். இதனை இரசங்களின் மன்னன் என்றும் பாராட்டுவர். காதல் இல்லாமல் கதை உண்டா? என்ற உலக மொழியையும் கேள்விப்படுகின்றோமன்றோ? இதற்கு மூலகாரணம் இலக்கியங்களில் இச்சுவையைக் கவிஞர்கள் அளவுக்கு மீறி வளர்த்திருப்பதுதான். கவிஞர் வாலியின் பாண்டவர் பூமியில் சந்தனு-கங்கை, சந்தனு-சத்தியவதி,