பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/407

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

388 : பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு உத்தரா! உனக்கு உரிமையான. காலிகளைக் கவர்ந்த-அக் காலிகளை; கழனிகளின்சாலிகளை மேய்ந்த-பெருச் சாளிகளை; 蓝一 நீள்வாள் எடுத்து... சாடாதிருந்தால்-உனைச் சாடாதிருக்குமா ஊர்? சண்டை போடாதிருந்தால்-கெட்டுப் போகாதிருக்குமா பேர்? -(I-பக். 278) இந்த வீர உரையால் உத்தரன் உணர்ச்சிவசப்பட்டான். வீரத்துடிப்பு அவனை ஆட்கொண்டு பார்த்தன் சொற்படி பணிபுரியலானான். மேற்கொண்டு இவன் பேசிய வீர உணர்ச்சி நெருடுகின்றது. பார்த்தேன் உன்னை; பாக்கியவான் ஆனேன்; உன்னால் பயத்திற்கே நானொரு பயமாகிப் போனேன்! தெள்ளத் தெளியச் சொல்லிச் சொல்லியே-இந்தத் தெள்ளைத் தேளாக்கினாய்! ஒரு தென்னை ஈர்க்கை வாளாக்கினாய்! (II – L15. 279-80) இதனைப் படிக்கும் நாம் உத்தரன் போல் ஆகிவிடுகின் றோம்; ஒட்ட உணர்தல் (Empathy) நிலை ஆகிவிடுகின்றோம்.