பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/413

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

394 : பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு விழுதுகள்-தாரமொடு வனவாசம் ஏற்றுபொழுதுகள் வேகமாய்ப் போயின; பதின்மூன்று மாதங்களாயின! காட்டில் வசித்தாலும்கந்தமூலம் புசித்தாலும்-இதழ் ஏட்டில் புன்னகையைஎழுதி வைத்தபடி இருந்தான். தரும பூபதி, - திரெளபதியின் பதி! அவனைவருத்த முடியவில்லையே என- - வருத்தப்பட்டது விதி! (II — LI6. 158) இந்தக் கவிதைப் பகுதியில் இக்கட்டான சூழநிலை யிலும் தருமனிடம் சாந்தம் நிலவியதாக நாம் அறிகின் றோம். சைவ சித்தாந்தம் இருவினையொப்பு இதுவே எனக் கருதுவதில் தவறில்லை. இங்ங்னமாகப் பாண்டவர் பூமியில் சுவைகளின் திறம் ஒருவாறு காட்டப் பெற்றது.