பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/431

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

412 : பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு விசுவருபம்: சகுனி யோசனைப்படி அமைக்கப் பெற்ற பொய்யாசனம் நொடித்துப் பொக்கெனச் சரிந்து நிலத்தின் கீழிருந்த நிலவறைக்குள் விழுந்தது; வாசுதேவன் எழுந்தான்; விசுவரூபம் எடுத்தான். விரிவஞ்சி அதனை ஈண்டுக் காட்டவில்லை. மூலத்தில் அதனைக் கண்டு மகிழலாம்? அவசியம் படித்து மகிழவேண்டிய பகுதி. தூது வந்தபோது கண்ணனின் வேறு முக்கிய செயல்கள்: () குந்திதேவியைக் கன்னனிடம் அனுப்பி, உண்மைத் தாய் என மெய்ப்பித்து பாண்டவர் பக்கம் வருமாறும், இயலாவிடில் அர்ச்சுனன்மீது அரவக்கணையை ஒரு முறைக்கு மேல் தொடுக்காதிருக்க இசைவு-வாக்குறுதி பெறச் செய்தலும் ஆகியவற்றை நிறைவேற்றுகிறான். கர்ணன் துரியனை விட்டுவர சம்மதிக்கவில்லை. அவன் கூறுவது: துரியனை நான் நீங்கினால் என் வாயே-அட! நாயே-என வையும்; பையப் பைய நன்றி கொன்றதால்-என்னுயிர் நையும்; நாடு தந்தான்; நெஞ்சமெனும் வீடு தந்தான்; நான் பெறாத பிடு தந்தான் நகைத்தோர்க்கு சூடு தந்தான்! நண்பருக்குக் காணிக்கையாக-அடு களத்தில் கொடுக்கவே 8 வில்லியில் திருதராட்டிரனே கண்ணனைக் கொல்ல வேண்டும் என்கின்றான். - 9 பா.பூ. 11-பக். 348