பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/434

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிருட்டிணன் துது : 415 உருக்கமான கவிதைகள்; உணர்ச்சிகளைப் பொறி மத்தாப்புபோல் வெளியிடும் அற்புதப் படைப்புகள்! (2) அசுவத்தாமனை மித்திரபேதம் செய்தல்: பேருருவத்தைச் சுருக்கிக்கொண்டு விதுரன் இல்லத்திற்குத் திரும்புவதற்கு முன் அசுவத்தாமனைக் கண்டு பேசு கின்றான் பரந்தாமன். அவனிடம் பாண்டவர்கள் ஐந்து ஊர் வேண்ட அதையும் மறுத்தான் துரியன். அதற்கு வரப்போகும் செருவில் அவனே சாட்சி என எடுத்துரைத்து மேலும் கூறுவான்; "ஆனா உனது.ஆண் மைக்குநிகர் அவனிதலத்தில் வேறு உண்டோ? ஞானா தியனே! போர்க்களத்தில் நாகக் கொடியோன் பணிந்து உன்னை சேனா பதிஆகு’ என்றாலும், செலுத்தேன். என்று நீமறுத்திஆனால உயவா ஐவருமமறறு அவர்பால் நினக்கும் அன்புஉண்டோ' " கண்ணன் இவ்வாறு உரைத்து தன் மோதிரத்தை வீழ்த்த, அதனை அசுவத்தாமன் எடுக்கும்போது வானில் ஊர்கோள் உற்றது என அவனும் வானை நோக்க, அவையோர், அசுவத்தாமன் சூள் உரைத்தான் என்று பேசுகின்றனர். அசுவத்தாமனை இனித் தெளியலாகாது என்று துரியோதனனும் அவையில் கூறுகின்றான். அசுவத்தாமன் கலக்கம் அடைந்து திருமால் தன்னைத் துரியன் தெளியாவணம் பேதித்தான் போலும் ' எனச் சிந்தித்து வருந்துகின்றான். ' 14 வில்லிபாரதம்.கிருட்டிணன் துரிதுது 222 15 இந்த நிகழ்ச்சியைக் கவிஞர் வாலி தம் காவியத்தில் தவிர்த்துவிட்டார்-யுத்த காண்டத்தைச் சுருக்கிவிட்டதால்.