பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/444

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் வாலியின் கிருட்டிண பக்தி & 425 நீளநீளமாய்ப் புகழ்நீள்வோனை; அந்தகாரத்திற்கு அப்பால்அமிழ்வோனை, உதயபாதுவிற்கு வெளிச்சம்உமிழ்வோனை; கழுத்து வெளுத்த கருடனை- செலுத்தும் புகழ்சால்-பரம புருடனை; எவன்மனத்தில் ஓயாது வரித்து- (II - பக். 476-77) இவை பரந்தாமனைப் பற்றியனவாக வந்தாலும் வாலியார்தான் இவற்றைச் சிந்திப்பதால் அவர்தம் கிருஷ்ணபக்தியைத் தெளிவாக்கும். ஈண்டும் சிலவற்றைக் காட்டுவேன். இவன் பிறப்புவளர்ப்புபற்றிப் பாரதியார், பிறந்தது மறக்குலத்தில்;-அவன் பேதமற வளர்ந்ததும் இடைக்குலத்தில் என்று கூறுவார். வசுதேவனுக்கும் தேவகிக்கும் சிறையில் மகனாகப் பிறந்து (சத்திரியர்), நந்தகோபன் இல்லத்தில் இடையன்) வளர்ந்தவன். பிறந்த குலத்தை மக்கள் மறந்தனர். வளர்ந்த குலம்தான் அனைவருக்கும் தெரிகிறது. மக்கள் மனத்தில் இடையன் என்றே வழங்கப்பெறுகின்றான். அதனால்தான் கவிஞர் வாலியும் ஆயர்பாடியைக் கண்ணன் ஊராகக் குறிப்பிடுவர். - 2 கிருஷ்ணாவதாரம் என்ற தலைப்பில் வருவன-1,பக். 14 தொடர்ந்து. 3 பா. க. கண்ணன் பாட்டு-கண்ணன் என் தந்தை-4