பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/445

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

426 & பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு அங்கிருக்கிறான் அரி யாதவனாகி; அங்கிருப்பவர் அறியாதவனாகி! (1-பக். 144) அரியே யாதவனாக வந்துள்ளான். இதனை, ஆதிமூலம் ஆகாயம் விட்டு அம்புவி வந்த-ஒர் அன்னைமூலம்! (I-பக். 144) பிறப்பில்லாதவன் தன் விருப்பத்தால்-நல்லோர் களைக் காக்கவும் தீயோர்களை அழிக்கவும்-தேவகியின் கருவில் புகுந்து புவிக்கு வந்தவன். பாலிலேயே படுத்துக் கிடந்தவன்தான் பால்கறக்கும் குடியில் பால் குடிக்கப் பிறந்தான்! (I-பக். 144) பெரிய பால் பண்ணைக்கு நாதனான நந்தகோபன் "இதை அநுபவிக்கக் குழந்தை இல்லையே!” என ஏங்கிக் கிடந்த நிலையில் மகனாக அமைகின்றான். கோனார் குலத்துக் குழவியாகி-அக்குலத்தோர்க்கு வானார் புகழை-வாரி வழங்கினான்! (1-பக். 144) என்பார் வாலியார். இதனைப் படிக்கும் நமக்கு, நந்தன் பெற்றனன்; நல்வினையில்லா நங்கள் கோன் வசுதேவன்பெற் றிலனே என்ற குலசேகரப் பெருமாளின் வாக்கு நினைவிற்கு வருகின்றது. 4 பெரு.திரு.1-3