பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/458

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் வாலியின் கிருட்டிண பக்தி * 439 மாலன்; மூங்கில் குழாய் ஏந்தும் பாலன் (III-பக். 499) எட்டும் என எட்டும் போக்கு எட்டும் எட்டு (III— u$. 501) எடுப்பு தொடுப்பு முடிப்பு மூன்றுமில்லாத கீர்த்தனை (III-பக். 502) குன்றெடுத்துகோபாலர்க்குக் குடை கவித்தவன் (I-பக். 514) இவை யாவும் வாலியாரின் பக்திச் சுடர் தெறிக்கும் சொல்லோவியங்கள். அவர்தம் ஆழ்உள்ளத்தினின்றும் கிளம்பிய அருள்விளக்க அமிழ்த தாரைகள். விசுவரூபம்: 'பாண்டவர் பூமி'யில் இரண்டு விசுவரூபங்கள் நடைபெறுகின்றன. ஒன்று கண்ணன் துது வந்தபோது நடைபெற்றது; மற்றொன்று கண்ணன் பாரதப் பெரும் போரில் பார்த்தனுக்குத் தேரோட்டியாக இருந்து கீதையை உபதேசித்த போது நடைபெற்றது. இரண்டையும் எடுத்து வாலியார் விளக்கும்போது வாலியாரின் ஈடுபாடும் கண்ணனைக் கூறும் பாங்கும் அவர்தம் கிருஷ்ண பக்தியைப் பிரகடனம் செய்கின்றன. முதலாவது விசுவரூபத்தை மட்டிலும் ஈண்டு காட்டுவேன். துரியன் துவரைநாதனுக்கு அமைத்த பொய்யாசனம் நொடித்து சரிந்தபோது நடைபெற்றது இது. வாசுதேவன் எழுந்தான்; விசுவரூபம் எடுத்தான்