பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 & பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு யக்ஞோபவிதம் போல்...' நெளிச்சலும் வளைச்சலுமாய் நதியொன்று ஒடும்: காலையும மாலையுமஅலைகள் சந்தி செய்வதுபோல்காயத்திரியை ஒதும்! அந்தப் புனலில் படுகையில்-ஒரு பர்ணசாலை; அதன் வலமும் இடமும் வாசப்பூக்கள் வனைந்தவர்ண சாலை! பிரதிதினமும் புலரியில்... அந்தப் பாணசாலையை-ஒரு பிரதட்சிணம் வந்து-அதன் நுழை வாயிலின் நேரேநெடுஞ்சாண் கிடையாகநிலத்தில் விழுந்து- , நமஸ்கரித்து விட்டுத்தான். தன பணிகளைத் தொடங்கும்பனிமலைக் காற்று! (I-பக்.71) இந்த அற்புதமான வருணனையில் தொடங்குகின்றது இந்தக் கட்டுரை. சில கட்டுரைகளின் தொடக்கம் அற்புதமாக அமைந்துள்ளது என்பதற்கு இஃது ஒர் எடுத்துக்காட்டு, பர்ணசாலை-வர்ணசாலை இணையை எண்ணி ஒர்ந்து மகிழலாம்.