பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/484

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உண்மைகளும் படிப்பினைகளும் * 465 அது அழுதாலென்ன? இது அழுதாலென்ன? ஆர் அழுதாலென்ன? ஊர் அழுதாலென்ன? நிட்காமியமாய் நிற்கும் விதி; நிர்தாட்சணியம்-அதற்கு நிர்ணயிக்கப் பெற்ற விதி! (I-பக். 130-31) வாலியாரின் கூற்றில் விதி செயற்படுவதைக் கண்டு மகிழலாம். (8) வனவாசமும் அஞ்ஞாதவாசமும் முடிந்த நிலை. அடுத்து ஆகவேண்டியதை யோசிக்க சபை கூடுகின்றது. கண்ணன் முதலில் பேசுகிறான். சூதுபற்றி பேச்சு வரும்போது, - அவனை (பாண்டுவை) அழைத்ததும் சூது; அவனோடு ஆடியதும் சூது! ஆக-தனது அம்மானைக் கொண்டு அந்தகன் பிள்ளை அடித்தான் கொள்ளை! விதி-சகுனியின் விரல்களில் குந்தியது; குந்தி குந்திமகன் சொத்தை-அது குறைவரக் கொந்தியது! (II— L&. 293) விதியினால்தான் அனைத்தும் நடைபெறுகின்றது என்ற உண்மையைக் கார்முகில்வண்ணன் வாக்கிலேயே அமைகின்றது.