பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/485

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

466 : பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு (9) சபையில் சாத்யகி என்ற யாதவவிரன் பலராமன் சொன்னதை மறுத்தும் கண்ணன் சொன்னதை ஆமோதித்தும் கூறின்போது துருபதன் பேசுகின்றான்: "சாத்யகி சொன்னதுੋਸf: நல்லவனல்ல துரியன்; நரி! இதமான வார்த்தைகளை எடுத்துரைத்து... - திருதராஷ்ரன் பிள்ளையைத் திருத்த வொண்ணாது; தினம்தினம்-அவனுக்குத் தின்ன சோறு செரிக்காதுதினையளவாவது-பிறர்க்குத் தீங்கு பண்ணாது! அது அவன் ஊழ்; ஊழை ஒட்டித்தான் ஒருவனுககு வாய்க்கிறது. உள்ளம்; உறைவிடம்; உறக்கம்; கூழ்! ஊழ் வயப்பட்டவனுக்கு உபதேபிப்பதெல்லாம் பாழ்! (I-பக். 296-97) சிந்தனையிலும் ஊழின் பங்கு உண்டு என்பதை துருபதனின் பேச்சால் அறிய முடிகின்றது. (10) சூதாட்டம் நடைபெறுகின்றது. தருமன் பணயம் வைத்த பொருள்களை எல்லாம் இழந்து விடுகின்றான். விதுரனுக்கு இது பொறுக்கவில்லை.