பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/487

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

468 : பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு வென்றது விதி; நான்விழுந்தேன் பொருதி! என்று-தன் இருக்கையில் குந்தினான் விதுரன்குனிந்த தலையொடு; அருகில்நின்றனன் விதியெனும் தேவன்நிமிர்ந்த தலையொடு! (I-பக். 136) இங்கு விதியின் வெற்றிநடை காட்டப்பெறுகின்றது. இறுதி அடிகள் இரண்டும் வாலியாரின் கூற்றாக அமைந்திருப்பதைக் கவனிக்க வேண்டும். நற்செயல் நடைபெறும் போதும் தீச்செயல் நடைபெறும்போதும் கவிஞன் வந்து பேசுவதைக் காவியங்களில் காணலாம். அந்த மரபையொட்டி வாலியார் பொறுக்க முடியாமல் விதியின் இறுமாப்பைக் காட்டுகின்றார். இவ்விடத்தில் பாரதியின் பாஞ்சாலி சபதத்தில் வரும் விதுரனின் பேச்சைச் சிந்தித்தால் ஒப்புநோக்கி இலக்கியச் சுவையில் ஈடுபடத் துணை செய்யும். துரியோதனன், இன்பம் எங்ங்ண் உண்டோ அங்கே ஏகிடென்று உரைத்தான் ? என்று சொன்னவுடன் விதுரன் பேசுகின்றான்: நன்றாகும் நெறியறியா மன்னன்; அங்கு நான்குதிசை அரசர்சபை நடுவே தன்னைக் கொன்றாலும் ஒப்பாகா வடுச்சொற் கூறிக் குமைவதனில் அணுவளவும் குழப்பம் எய்தான்; சென்றாலும் இருந்தாலும் இனிஎன் னேடா? செய்கைநெறி அறியாத சிறியாய், நின்னைப் பொன்றாத வழிசெய்ய முயன்று பார்த்தேன்; பொல்லாத விதி என்னைப் புறங்கண்டானால்! (213) 7. பா.க. பாஞ்சாலி சபதம்-அடிமைச்சருக்கம் பக். 212