பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/489

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

470 & பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு இரண்டையும் ஒப்பு நோக்கி அனுபவிக்கும்போது இரண்டிலும் கருத்துகள் ஒன்று போல் இருப்பதை அறிகின்றோம். பாரதியின் தாக்கம் வாலியாரிடம் அமைந்திருப்பதையும் உணர்கின்றோம். 20) போர் தொடங்குவதற்கு முன் உதிட்டிரன் பிதாமகனிட்ம் ஆசிபெறச் சென்ற போது அவன் பேச்சில் வருவது. வாதிவிரும்பினால்... ஒருவன்விரலைக்கொண்டே-அவன் விழியைப் போக்கும்; ஒருவன்சொல்லை கொண்டேஅவன் பல்லை நொக்கும் (III— цѣ. 571) 3. நம்பிக்கைகள் மானிடனாகப் பிறந்து வாழும் காலத்தில் பல்வேறு கருத்துகள்பற்றிய நம்பிக்கைகள் அவன் வாழ்க்கையில் சாயல்களாகப் படிகின்றன. வழிவழியாக வரும் இத்தகைய நம்பிக்கைகள் மனிதப் பண்பாட்டின் ஒரு பகுதியாக அமைந்து விடுகின்றன. இவை காவியங்களிலும் இடம் பெற்றுவிடுகின்றன. (1) சாபங்கள்: கடவுளர்கள், முனிவர்கள், தவசிகள்--ஏன்? சாதாரண மக்கள்கூட-தகாத செயல்கள் நடைபெறும்பொழுது அவற்றைப் பொறுக்காமல் செயல்புரிந்தோரைச் சபிப்பதைக் கண்டு அஞ்சும் நம்பிக்கை இருந்து வருவதைக்