பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/490

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உண்மைகளும் படிப்பினைகளும் * 471 காவியங்களில் காணலாம். பாண்டவர் பூமியில் இவை வரும் இடங்களைக் காட்டுவேன். பீஷ்மன் பற்றிய வரலாற்றில் இரண்டு சாபங்கள் குறிப்பிடப் பெறுகின்றன. கங்கையின் வாயில் வைத்துப் பேசப் பெறுகின்றன. ஏழு குழந்தைகளையும் ஆற்றில் வீசி எறிந்து எட்டாம் குழந்தையையும் வீசி எறியும் போது அதனைத் தடுத்த சந்தனுவிற்கு தன் வரலாறு குறித்துப் பேசுகின்றாள். () நான்முகன் போட்டது. கங்கை வாக்கில் வைத்துப் பேசுகின்றார் வாலி: ஒருநாள். பிரமனை தரிசிக்க-நான் பரலோகம் சென்றேன்; உந்திக்கமலம் உதித்தானைவந்தித்து நின்றேன்! புன்கண் போக்கும்எண்கண் நோக்கஎன் கண் கசிந்தேன்; வேத நான்முகன் காட்டும்நான்முகம் மலரநான் முகம் மலர்ந்தேன்! அன்றுஅரவிந்தன் அவையில் அமரர் கூட்டம்அரவிந்தம் மொய்க்கும் அறுகால்களாட்டம்! அப்போது. வாயுதேவன்-அந்த வானவரின்சஞ்சலபுத்தியை சோதிக்க எண்ணினான்;