பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/496

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 உண்மைகளும் படிப்பினைகளும் & 477 ஆண்மானின்அடிமார்பில்பாண்டு ஏவியபாணம் பாய்ந்தது; மறுகணம்-அந்த மான்-ஒரு முனிவனாய் மாறிமண்ணில் சாய்ந்தது! பிணைமானும்-உடனே பெண்ணுருக் கொண்டது; பிரமித்துப் போய்பித்தேறி நின்றது! பாண்டுபக்கத்தில் வந்தான்; பயத்தில்பானைச் சோறாய் வெந்தான்! மரணிக்கும் தறுவாயில்முனிவன் பேசினான்; திராவகத்தில்-சொற்களைத் தோய்த்து வீசினான்! “ஒரு - to கணையைக் கொண்டு இணையைப் பிரித்தவனே! வெண்கதிர்குலத்துப் புகழைகறையானாய் அரித்தவனே! நானொரு முனிவன் என்பேர் கிந்தமன்!!-பொய் மானிடம் வெறுத்து-இந்தக் கானிடம் வந்தவன்!