பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/501

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

482 : பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு கற்களாய்ச்-சுள்ளென்றுசுடச்சுட இறைத்தான்! வேந்தர்களே! நீங்கள் வாய்மைக்குக் கேளிர்-எனில் வீமன் உரைக்கின்றேன்-என் ஒருசொல் கேளிர்! நடையில் நளாயினியின் - நகலை; நள்ளிரவின்இடையில் எமக்குற்றஇனிய பகலை; உயிர்த்துஉடையில் உலவுகின்றஉன்னதங்களின் புகலை; புடையில் புயல்வரினும்-தன் பொலிவழியா அகலை; தருமத்தின் தோள்தழுவியதொடையலை; தெய்வப் படையலை; தனது தொடையிலே வந்தமரத்துண்டிய துர்த்தனை... கண்ணிலான் பெற்றகண்ணிலானை; “ஒரு கருத்தன் இருக்கிறான்!” எனும் கருத்திலானை.... - துரியோதனன் என்னும்-இந்த துஷ்ட ஜந்துவைபடையை நடத்தி-நான் பொருதும் நாளில்தொடையைப் பிளந்து-கொலைத் தொழிலை முடிப்பேன்; அஃதேபோல்