பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/521

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

502 : பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு வாணவெளிச்சம் போல-ஒரு ஞானவெளிச்சம் பெய்தான்! தொனித்தது- * . தெய்வத்தின் குரல், குரல்வழிதெறித்தது- * தத்துவப் பரல்! (III-பக். 403) கண்ணன் தொடங்கிய பாடசாலையைப் பார்த்தவர் களும் கேட்டவைகளையும் பற்றிக் கூறுவார் வாலியார், பஞ்ச பூதங்களும்பார்த்தன வியந்துபகவான் தொடங்கியபாடசாலையை! பொற்றேரில்பூட்டியிருந்த புரவிகள்... 'போக்கலாமேபொல்லாப் பிறப்பென்னும் வாதையை' اسمه "6f6fam எழுதிய சித்திரமாய்இங்கங்காடாதுஇருசெவி நிறுத்தி... கேட்களாயினகேசவன் வாய்மலரும் கீதையை! (III-402) வாலியாரே சாரமாக்கியுள்ளார் கேசவன் கொட்டி புள்ள அருளுரையை. அதனை மேலும் சுருக்கி சாரத்தின் சாரமாக ஈண்டுத் தருகின்றேன். ஆனால் வாசகர்கள் வாலியாரின் வாக்கிலேயே படித்து அநுபவிக்க வேண்டும் என்பது என் பரிந்துரை. இதோ என் சாரத்தின் சாரம். 1. ஆன்ம தத்துவம்: கண்ணன் உரையில் முதலில் வருவது இது. வாலியாரின் வாக்கிலேயே தருகின்றேன்.