பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/548

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முடிவுரை 529 அழகு-[பீமன், அபிமன்யு, அர்ச்சுனன்] (7) காம இச்சை - ஆண்கள் கீசகன், அர்ச்சுனன், சந்தனு, நகுஷன்; பெண்கள் - இடிம்பி, ஊர்வசி, சுபத்திரை, சித்திரங்கதை; (8) அர்ச்சுனன் தவநிலை-என்ற தலைப்புகளில் சுவையாக எடுத்துக்காட்டப் பெற்றுள்ளன. இயல் மூன்றில் கதை மாந்தர்கள் அறிமுகம் தரப்பெற்றுள்ளது. கதைக்கு இன்றியமையாதனவுள்ள ஐம்பத்துஐந்து பேர் அறிமுகமாகியுள்ளனர்-வாலியாரின் வாக்கிலேயே. இயல் நான்கில் அணிநலன்கள் காவியத்தில் அமைந்துள்ள நேர்த்தி நுவலப் பெற்றுள்ளது. உவமை, உவமத் தொகை, உருவகம் ஆகியவற்றை அமைத்து கவிதை பாடுவதில் வாலியாரின் தனித்தன்மை புலனாகின்றது என்பது தெளிவாக விளக்கப் பெற்றுள்ளது. இயல் ஐந்து கவிஞர் வாலியின் சொல்லாட்சிச் சிறப்பினைச் சொல்லுகின்றது. இது (1) சொல்வீச்சுகள், (2) பழமொழிகள், (3) சொற்பொருள் நயப்பகுதிகள், (4) மரபுத் தொடர்கள் இவற்றை வாலியார் காவியத்தில் அற்புதமாக அமைத்து காவியத்திற்குப் புது மெருகூட்டப் பெற்றுள்ளமை தெளிவாக விளக்கப் பெற்றுள்ளது. இயல் ஆறில் காவியத்தில் கிளைக்கதைகள் அற்புதமாக அமைந்து முதற் கதையின் ஓட்டத்தை முடுக்கி விடுவதையும் பல நீதிகளைப் பகர்வதையும் காண முடிகின்றது. இந்தப் பாங்கு வாலியாரின் கைவந்த கலையாக மிளிர்கின்றது. இயல் ஏழில் நவரசங்கள் அமைந்துள்ள பாங்கு மிக நுணுக்கமாக எடுத்துக்காட்டப் பெற்றுள்ளது. இரச தத்துவம் இன்னதெனவும், காவியத்தில் அமைந்துள்ளவையே இரசம்