பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

她 வருணனை வளம் * 33 இதில் தன் பாசத்திற்கும் நேசத்திற்கும் பாத்திரனான அர்ச்சுனனின் தந்தை இந்திரனுக்கும் நினைவுச்சின்னம் ஏற்படுத்தினான் கண்ணன்-கார்மேக வண்ணன் என்று கருதலாம். (2) மயன் மண்டபம்: வெந்து விபூதியான காண்டவ வனத்தில் இறவாதிருந்தவர்களில் ஒருவன் மயன் எனும் கல்தச்சன். இவன் மண்டோதரியின் அச்சன். இலங்கேசன் இவனது மருமகன். அசுரர்களின் ஆஸ்தான சிற்பியாய் ஆனவன். - தன்னை உயிர் தப்புவித்த காண்டீபனுக்குக் கைம் மாறாக இந்திரப் பிரஸ்தத்தில் ஒரு மாபெரும் மாளிகையை எழுப்பினான். இதனை நிறுவுவதற்குப் பதினான்கு மாதங் களாயின. வாலியார் வாக்கில் இதோ அந்த மாளிகை: சிற்பி மயன் சிருட்டித்த சபையின் சோபிதம்-எவரும் சொல்லத் தரமன்று ஈடாகச் சொல்லவும் இல்லையொரு மன்று! பிறவாக் கவிஞன்-இங்கு பிறந்து-பூமிமேலெழுதிய இறவாக் கவிதை-என எழுந்து நின்ற... அந்தமணிமண்டபம்-ஒரு மகோன்னத மாகும்; அதன்குடுமியில்-தனது குதிகால் தடுக்கிகுட்டிக் கரணம் அடிக்கும்குழந்தை மேகம்!