பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 : பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு கூடவே கொண்டுவந்தான்; பீமனுக்கு கதையையும்-விஜயனுக்கு கைச்சங்கையும் தந்தான்! நன்றிக் கடனை நறுவிசாகச் செலுத்திவிட்டு மயன் சென்றான்; ஊரார் மனத்தில் நின்றான்! (I-பக்.79-82) அற்புதமான வருணனை. இது நன்னகரின் நடுவே அமைந்துள்ள ஓர் அழகிய பூங்காபோல் காட்சி அளிக் கின்றது. நளினமான சொற்றொடர்கள் மண்டபத்தை நம் மனக்கண்முன் கொண்டுவந்து நிறுத்தத் துணை புரிகின் றன; கதையும் சங்கும் பின்னால் நடக்க விருக்கும் போரில் ஆற்றவல்ல பங்கினை முற்கூறியதாகவும் கருதலாம். (3) பாஞ்சாலநகர் அலங்காரம்: அவைப் பெரியோர் தெரிவித்த தெள்ளிய கருத்தைச் செவியால் ஏற்ற துருபதன் மகள் சுயம்வரத்திற்கு நாள் குறித்தான்; நாட்டார்க் கெல்லாம் சேதி அறிவித்தான். நகர் அலங்காரம் செய்யப் பெற்றது. இதனை வாலியார் விளக்குவது : பூஞ்சாளம் பிடித்த பாத்திரத்தை கலாய் பூசி கவினுறச் செய்தல் போல்... பாஞ்சாலம் பூராவுமே பள்ளம் மேடு இன்றி புதுப்பிக்கப்பட்டது; மண்சட்டை அணிந்திருந்த வீதிகளுக்கு-மாதர் கூட்டம் மாக்கோலச் சட்டையை மாட்டி விட்டது!