பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ் மொழித்துறை டாக்டர் வ. ஜெயதேவன் சென்னை-600 005 பேராசிரியர் - தலைவர் 11–3—-2002 அணிந்துரை இந்தியத் திருநாட்டிற்கு எத்தனையோ பெருமைகள் உள்ளன. அவற்றுள் அதன் இதிகாசப் பெருமை மிகவும் சிறப்பாகக் குறிக்கப்படுகிறது. இராமாயணம், மகாபாரதம் என்னும் இருபெரும் இதிகாசங்களின் தாயகமாக இந்தியா திகழ்வதே அத்தகு சிறப்பிற்குக் காரணம் ஆகும். சுவாமி விவேகானந்தர் கூறும் பின்வரும் கருத்துகளைக் கூர்ந்து படித்தால் இந்திய இதிகாசப் பெருமையை நன்கு தெரிந்துகொள்ளலாம்: “There are two great epics in the Sanskrit language, which are very ancient. They embody the manners and customs, the state of society, civilization. etc., of the ancient Indians. The oldest of these epics is called Ramayana, ‘The Life of Rama”. ...Rama and Sita are the ideals of the Indian nation. All children, espicially girls, worship Sita. The height of a woman’s ambition is to be like Sita, the pure, the devoted, the ali-suffering. - Mahabharata means Great India or the story of the great descendants of Bharata. This epic is the most popular one in India; and it exercises the same authority in India as Homer's