பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 & பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு தொடர்களால் கதைவானம் நம் மனவானத்தில் காள்கொள்ளும்! (3) மந்தபாலர் காண்டவ வனத்தில் வாழ்ந்த முனிவர்; தண்ணிர் எள் இறைக்க வாரிசு இல்லாமல் ஏங்கி நின்றவர். இவர் வரலாறு படித்து இன்புறத்தக்கது, (II-பக்:68-78) இவரைப் பற்றிய வாலியாரின் வருணனை: ஒருமுனிவர் இருந்தார்முன்னம், பிறமுனிவர் குனிவர்-அவர் முன்னம்! அவர் அத்தகு. மகாசீலர்; பெயர் மந்த பாலர்! அஞ்சு வயதிலிருந்தேஅஞ்சுதல் போக்கும்அஞ்சை ஒதிஒதிஅஞ்சை அவித்தவர்; அளவிலா அருள்வலி குவித்தவர்! ஆண்டுகள் கணக்கில்அமர்ந்தது அமர்ந்தபடி.. ஆன்மீகம் துலங்க-அவர் ஆற்றும் தவத்தில்-அவர்மேல் வான்மீகம் கிடுகிடெனவளர்வதை ஓரார்; தவம் முடியாது-குடிலுக்குத் திரும்பி வாரார்! தவத்தைக் கெடுக்கதேவமாதர் வரின்