பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருமொச்சை உட்கார்ந்தமுலாம் பழங்களை-ஒரு கச்சை தாங்கியது; மோகநச்சை உமிழ்கின்றநயனங்களில்-காம இச்சை துலங்கியது! அவள் கன்னங்கள்கிட்டப் பறந்து-மட அன்னங்கள்-தம் முகம் பார்க்கும்; ‘பூக்கள்புளித்து விட்டன! என்று-தேன் ஈக்கள்-அவளது இதழ்களிடம் கள் கேட்கும்! கண்கள்காதுகளில் இடிக்கும்; கூந்தல்குதிகாலைப் பிடிக்கும்! ஒரு செளந்தர்ய சூறாவளி. மாவீரன் பீமன்முன்மையம் கொண்டது; "அது- - தன்னைக் கடக்குமோ? இல்லை தன்னைக் கடத்துமோ? என்றுஅவன் மனம்-ஒர் ஐயம் கொண்டது! (1-பக்294)