பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ாலருலப் பாடங்கள்

வங்கள் வீட்டுக் கூடங்கள் -அதில் எங்கும் சுயநலப் பாடங்கள்; எங்கள் ரத்த நாளங்கள் அதில் - எத்தனை குப்பைக் கூளங்கள்!

அடுத்த வேளைச் சோற்றுக்கு அமைச்சர் பின்னால் சுற்றியவன் அடுக்கு மாடி உணவகம்கட்டி ஆகாயத் தைத் தொடுகின்றான்!

மாற்றுக் கட்டு வேட்டியின்றி சோற்றுக் கட்சி தொடங்கியவன் - நேற்று தொட்டு நவீனமயமாய் நெசவா லைகளைத் திறக்கின்றான்!

கருங்கா லிக்குக் கூடஇங்கே கெளரவ மான நாற்காலி! முருங்கை மரத்து முக்காலிக்கும் முண்டி யடிக்கிறது கைக்கூலி!

எங்கும் எதிலும் சுருட்டல்கள்; எல்லாம் சில்லரைத் திரட்டல்கள்!

பங்குச் சந்தைக் கொள்ளைகளில்

பாரதம் கூறு போடுகிறார்!